சீன தேசிய  கீதத்தை ஹாங்காங்கில் இசைத்தால் வெடித்த போராட்டம்..!

 

சீன தேசிய  கீதத்தை ஹாங்காங்கில் இசைத்தால் வெடித்த போராட்டம்..!

சீன தேசிய தினத்தையொட்டி ஹாங்காங்கில் சீனாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இடையே போராட்டம் வெடித்துள்ளது.

பிரிட்டிஷ் காலனியில் இருந்த ஹாங்காங் நாடு சீன அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் சீன அரசு ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு அவர்களுக்கு தண்டனை வழங்க ஹாங்காங்கில் மசோதா நிறைவேற்றப்பட இருந்தது.

சீன தேசிய தினத்தையொட்டி ஹாங்காங்கில் சீனாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இடையே போராட்டம் வெடித்துள்ளது.

பிரிட்டிஷ் காலனியில் இருந்த ஹாங்காங் நாடு சீன அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் சீன அரசு ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு அவர்களுக்கு தண்டனை வழங்க ஹாங்காங்கில் மசோதா நிறைவேற்றப்பட இருந்தது. இதனை எதிர்த்து பொதுமக்கள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வேலைநிறுத்தத்தில் இறங்கியதால்  ஒட்டு மொத்த நாடே ஸ்தம்பித்தது. பொருளாதாரமும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. 

china

இந்நிலையில் இன்று சீன தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஹாங்காங்கில் சீனாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனை எதிர்த்து பொதுமக்களில் சிலர் முகமூடியை அணிந்து கொண்டும், கருப்புக்கொடி காட்டியும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயற்சிகளையும் மேற்கொண்டனர். 

ஆனால் போராட்டக்காரர்கள் எதற்கும் அடங்காமல் சாலை ஓரங்களில் இருந்த குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை ரோட்டில் கொட்டி, அதற்கு தீ வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களின் இந்த செயலால்  சில மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டது. அன்றாட வேலைக்கு செல்பவர்கள் இதனால் தவித்து வருகின்றனர். 

“ஒரே நாடு, இரண்டு அரசியலமைப்பு” என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து போராட்டம் இன்றளவும் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

-vicky