சீன காதலியை கரம் பிடித்த இந்திய இளைஞர்……கொரோனா வைரஸால் திருமணத்துக்கு வர முடியாத மணப்பெண்ணின் பெற்றோர்…

 

சீன காதலியை கரம் பிடித்த இந்திய இளைஞர்……கொரோனா வைரஸால் திருமணத்துக்கு வர முடியாத மணப்பெண்ணின் பெற்றோர்…

மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் பிந்து நேற்று தனது நீண்ட நாள் சீன காதலியை திருமணம் செய்தார். கொரோனா வைரஸால் மணப்பெண்ணின் பெற்றோர் இங்கு வரவில்லை.

மேற்கு வங்கம் கிழக்கு மிட்னாபூர் பகுதியை சேர்ந்தவர் பிந்து. இவர் சீனாவுக்கு தொழில் விஷயமாக சென்று வருபவர். அப்படி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வைத்து பி ஜியாகியை பார்த்துள்ளார். பார்த்தவுடன் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் பிறந்தது. பல ஆண்டுகளாக அவர்களது காதல் தொடர்ந்தது.

கொரோனா வைரஸ்

இந்நிலையில், அவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களது திருமணம் மாப்பிள்ளை பிந்துவின் சொந்த ஊரான பிந்து கிழக்கு மிட்னாபூரில் உள்ள அவரது வீட்டில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பிந்துவும், ஜியாகியும் கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்தியா வந்து விட்டனர். அவர்களது திருமணம் நேற்று நிச்சயத்தப்படி சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் ஜியாகியின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை.

பிந்து-ஜியாகி தம்பதியினர்

இது குறித்து ஜியாகி கூறுகையில், எனது பெற்றோர் நலமாக உள்ளனர் மற்றும் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக சீனா-இந்தியா இடையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் இங்கு வர முடியவில்லை. சீனாவில் இயல்புநிலை திரும்பியவுடன் நாங்கள் அங்கு செல்வோம் என தெரிவித்தார்.