சீன அதிபரை எதிர்த்து முழக்கமிட்ட 11 திபெத்தியர்கள் கைது..!

 

சீன அதிபரை எதிர்த்து முழக்கமிட்ட 11 திபெத்தியர்கள் கைது..!

சீனாவுடன் இணைந்துள்ள திபெத்தை தனி நாடக அறிவிக்கக் கோரி, திபெத் நாட்டை சேர்த்தவர்கள் நெடுநாட்களாக போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று மாலை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இதற்காக, சென்னை வரவிருக்கும் சீன அதிபர் ஜின்பிங் கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலுக்குச் சாலை மார்க்கமாக வந்த பிறகு, மாமல்லபுரம் செல்லவுள்ளார். 

China president

இந்நிலையில், கிராண்ட் சோழா ஓட்டல் அருகில் 7 கட்ட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் திபெத் நாட்டை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் திடீரென தனது நாட்டுக் கொடிகளுடன் சீன அதிபரை எதிர்த்து கோஷங்கள் முழங்கிய படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கே காவலுக்காகக் குவிக்கப் பட்டிருந்த காவல்துறையினர் அந்த 5 பேரையும் அதிரடியாகக்  கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்தவிருந்த 6 திபெத்தியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Tibetans

சீனாவுடன் இணைந்துள்ள திபெத்தை தனி நாடக அறிவிக்கக் கோரி, திபெத் நாட்டை சேர்த்தவர்கள் நெடுநாட்களாக போராட்டம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், சீன அதிபர் திபெத் நாட்டிற்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்காததால் சீன அதிபர் எங்குச் சென்றாலும் அங்கே திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tibetans