சீனாவை விட்டு வெளியேறியது சாம்சங்..! ஆயிரக்கணக்கான சீனர்கள் வேலை இழப்பு!?

சீனாவை விட்டு வெளியேறியது சாம்சங்..! ஆயிரக்கணக்கான சீனர்கள் வேலை இழப்பு!?

அமெரிக்கா,சீனா வர்த்தக போரின் அடுத்த அட்டாக்காக அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறி விட்டது.சீனாவில் தொழிலாளர்கள் ஊதியம் மிகவும் குறைவாக இருந்த காலத்தில் சீனாவில் காலடி எடுத்து வைத்த சாம்சங் தனது முக்கிய செல்ஃபோன் தொழிற்சாலைகளை சீனாவில்தான் நிறுவியது.

அங்கு உற்பத்தி செய்யப்பட்ட போன்களைத்தான் அது ஆர்டிக்கில் இருந்து அமெரிகா.வரை கொண்டு போய் விற்றது.மோட்டரோலா,எரிக்சன்,போன்ற கம்பெனிகளைக் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் ஒன் செல்ஃபோன் பிராண்ட் இடத்தைப் பிடித்தது.

அதன்பிறகு, மெல்ல மெல்ல சீன உள்ளூர் தயாரிப்புகள் மார்க்கெட்டில் போட்டியிடத் துவங்க , பத்தாண்டுகள் முன்பு சீனாவிலும் தொழிலாளர் ஊதியம் உயரத்துவங்கியதும் சாம்சங் வியட்நாமில் கால் வைத்தது.இன்றைய தேதியில் வியட்நாமில் உள்ள சாம்சங் தொழிர்சாலையில் 2 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். அமெரிக்கா சீன வர்த்தகப்போரில் பலனடையும் நாடுகளில் வியட்நாம் முக்கியமானது.

samsung

அப்போதே சீனாவில் இருந்த சில கிளைகளை மூடிவிட்டது.அதுவரை உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் மார்கெட்டில் 15% சாம்சங்கின் கையில் இருந்தது.இன்றும் ஆண்டுக்கு 29 கோடி ஃபோன்கள் தயாரித்து முதலிடதில் இருந்தாலும் சீனத்து மார்கெட் சுத்தமாக சாம்சங்கின் கையை விட்டுப் போய் அதன் பங்கு இப்போது வெறும் 1% ஆக சுருங்கிவிட்டது.

samsung

சீன உள்ளூர் நிறுவனங்களான ஜியோமி,ஹவாய் மட்டும் இல்லாமல் சீனாவில் நூற்றுக்கணக்கான செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களும் வந்து சாம்சங்கின் இடத்தை பிடித்துவிட்டன.வெகுநாட்களாகவே திட்டமிட்டு உற்பத்தியை குறைத்து வந்த சாம்சங் இப்போது தனது ஹொய்ஸ்ஹொ நகரில் இருந்த கடைசி ஆலையையும் மூடி விட்டது.
2017-ல் 63 லட்சம் ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்த இந்த ஆலையில் 6000 சீனர்கள் வேலை பார்த்து வந்தனர்.இனி வியட்நாமிலும் இந்தியாவிலும் உள்ள ஆலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் போகிறது.