சீனாவில் 10 லட்சம் உய்குர் முஸ்லீம்கள் சிறையில்! தொழிற் பயிற்சி என்கிறது சீனா!!

 

சீனாவில் 10 லட்சம் உய்குர் முஸ்லீம்கள் சிறையில்! தொழிற் பயிற்சி என்கிறது சீனா!!

ஹாங்காங்கில் தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள்,தற்போது நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி போன்றவற்றை பார்க்கும் போது,இன்னொரு தியானன்மென் சதுக்க பயங்கரம் நேருமோ என்று உலகமே அச்சத்தில் இருக்கிறது. அதே சமயம், வெளி உலகிற்குத் தெரியாமல் பத்துலட்சம் இஸ்லாமியரை மிக ரகசியமான சிறை முகாம்களில் சீனா அடைத்து வைத்திருக்கும் செய்தி இப்போது வெளிவந்து இருக்கிறது.

ஹாங்காங்கில் தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள்,தற்போது நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி போன்றவற்றை பார்க்கும் போது,இன்னொரு தியானன்மென் சதுக்க பயங்கரம் நேருமோ என்று உலகமே அச்சத்தில் இருக்கிறது. அதே சமயம், வெளி உலகிற்குத் தெரியாமல் பத்துலட்சம் இஸ்லாமியரை மிக ரகசியமான சிறை முகாம்களில் சீனா அடைத்து வைத்திருக்கும் செய்தி இப்போது வெளிவந்து இருக்கிறது.

china

சீனாவில் 2 கோடி பேருக்கு மேற்பட்ட முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.அவர்களில் உய்குர் என்கிற முஸ்லீம்களே அதிகம்.இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை வளற்பதற்காக பணத்தை வாரி இறைக்கிறது  சீனா.இதனால் பாகிஸ்தானில் இருந்து நிறைய இளைஞர்கள் மேல்படிப்புக்காகவும் வணிகத்துக்காகவும் சீனா வருவது அதிகரித்து வருகிறது.அதே சமையம் சீனாவில் அங்கங்கே இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கத் துவங்கியது.ஜிங்ஜியாங் என்கிற மாநிலத்தில் உய்குர் முஸ்லீம் மக்கள் வாழும் மாநிலத்திலும்,மற்ற பகுதிகளிலிம் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இஸ்லாமிய அடையாளங்களை முற்றிலும் அழிக்க சீனா முடிவு செய்தது.அவர்களுக்கு மார்க்கக் கல்வி கற்பிப்பதை தடை செய்தது.
இதனால் சீன இஸ்லாமியர் படும் துண்பங்கள் பற்றிய செய்திகள் வெளிவரத் துவங்கின.முக்கியமாக ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகள் இது பற்றி ‘ மனித உரிமை மீறல்கள் ‘ என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தன.சீனா இதெல்லாம் தங்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று சொல்லி சமாளித்து வந்தது.ஆனால்,உலகலாவிய செய்தியாளர்கள் கூட்டமைப்பு ஒன்று சீனாவில் பத்துலட்சம் இஸ்லாமிய இளைஞர்கள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு இருப்பது பற்றி புகைப் படங்களுடன் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

muslims

அந்த முகாமில் இருக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதோடு அவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும்
உறங்கும் நேரம்,உண்ணும் நேரம் , யாரேனும் உறவினர்கள் வந்தால் அவர்களோடு பேசும் நேரம் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
இந்த ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட மறுத்தாலோ,தப்பித்துப் போக முயற்சித்தாலோ கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.அவர்களது மத நம்பிக்கைகளில் இருந்து வெளியே கொண்டுவரும் பாடத்திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.அனைவரும் , மாண்டிரியன் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைவரும் , மாண்டிரியன் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவற்றை ஒழுங்காகக் கடை பிடிக்கும் இளைஞர்களுக்கு பரிசுகள் தரவேண்டும் என்பது போன்ற முகாம் அதிகாரிகளுக்கு தரப்பட்டு இருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்த ஆவனங்களும் மேற்குலக செய்தித்தாள்களில் பிரசுரிக்கப் பட்டன.
இதற்கெல்லாம் அஞ்சாத சீனா,இது அந்த இஸ்லாமிய இளைஞர்களுக்கு முறையான கல்வியும்,வேலை வாய்ப்பும் தருவதற்கான முயற்சி என்றும், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்க ஆதரவு நாடுகள் இப்படி செய்தி வெளியிடுவதாகவும் சொல்கிறது.அந்த பயிற்சி முகாம் பற்றிய கேள்விகளுக்கு அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளரான ஜெங் சுஹாங் இது பற்றிய கேள்விகள் பொருளற்ற பிரச்சாரம். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் காரியம் என்றே மீண்டும் மீண்டும் பதிலளித்து வருகிறார்.

ஹாங்காங் விவகாரத்தில் தைரியமாக பேசும் சீனா,சிறை வைக்கப்பட்டு இருக்கும் உய்குர் இஸ்லாமியர் விவகாரத்தில் எதையோ மறைப்பதாகவே தோன்றுகிறது.