சீனாவில் நாய் கடித்து சிறுமி மரணம்! உரிமையாளருக்கு சிறை?

 

சீனாவில் நாய் கடித்து சிறுமி மரணம்! உரிமையாளருக்கு சிறை?

சீனாவில் நாய்கள் கடித்து சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து நாயை வளர்த்த நபருக்கு தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

china

.
சீனாவின் ஏபெய் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கடந்த நவம்பர் 21ம் தேதி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு நாய்கள் சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறின… சிறுமியின் கழுத்தைக் கவ்விய நாய், 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. உடன் அருகில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி, சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்

death

.
இந்த நாய்களை 2014ம் ஆண்டிலிருந்து அந்த நபர் வளர்த்து வந்துள்ளார். நாய்கள் மிகவும் பெரியதாக, மூர்க்கமாக உள்ளதால் அதை சங்கிலி போட்டு கட்டி வைக்கும்படியும், வெளியே செல்லும்போது பெல்ட் அணிந்து இழுத்து செல்லும்படியும் அந்த ஊர் மக்கள் பலமுறை அவரிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தவே இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இரண்டு நாய்களையும் வளர்த்த வந்த உரிமையாளர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

arrest

.

உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே நாய்கள் சாலையில் சென்ற பெண்ணை கடித்துள்ளன என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு அண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், அந்த பகுதியின் பப்ளிசிட்டி துறை இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு 71 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கும்படி நாயின் உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாம்.