சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

 

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே கொரோனா வைரஸ்’ என்றழைக்கப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் சீனாவில் பரவி வருகிறது. முதன் முதலில் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. முதற்கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு மனிதர்களிடம் இருந்து மனிதர்களிடையே இந்தக் காய்ச்சல் பரவும் என்று தெரிய வந்துள்ளது.

ttn

அதாவது நோயாளிகளின் சுவாசம் மூலமாக நோய் பரவும் என்று கடுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வைரஸ் காய்ச்சல் விலங்குகளிடம் இருந்து பரவுவதாக வதந்தி கிளம்பியது. இந்நிலையில், இதுவரை 13 மாகாணங்களில் சுமார் 440 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ttn

மேலும், இதுவரை 9 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே போகிறது. இதனால் சீனாவில் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகமூடி அணிந்தே வெளியில் சென்று வருகிறார்கள். தற்போதைய புதிய செய்தியாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.