சீனாவில் ஒரு மில்லியன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்று சாதனை

 

சீனாவில் ஒரு மில்லியன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்று சாதனை

சீனாவில் வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 கூடிய விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் ஆகவிருக்கிறது. தற்போதைக்கு சீனாவில் மட்டும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில், மூன்று வாரங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான யூனிட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை மூன்றே வாரங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கியிருக்கின்றனர். இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 3 ஜிபி, 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் வகைகள், 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி, 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, யு.எஸ்.பி டைப்-சி, குயிக் சார்ஜ் 4.0, 48 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, ஏ.ஐ வசதி, 13 எம்.பி. செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.