சீனாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 324 இந்தியர்கள் டெல்லி வருகை; சிறப்பு மருத்துவ முகாமில் கண்காணிப்பு!

 

சீனாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 324 இந்தியர்கள் டெல்லி வருகை; சிறப்பு மருத்துவ முகாமில் கண்காணிப்பு!

ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவி அங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களை பலிகொண்டுள்ளது. சீனாவை மட்டுமல்லாது,  கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

 

சீனாவிலிருந்து கேரளா வந்த நால்வருக்கு கொரனா  வைரஸ் அறிகுறி இருந்ததால் அவர்கள்  திருச்சூரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகச் சீனாவிலிருந்து  சொந்த நாடுகளுக்குத் திரும்பும் மக்கள் கொரனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்ட பிறகே நாட்டுக்குள் வர  அனுமதிக்கப்படுகிறார்கள். 

ttn

இந்நிலையில் கொரனா பாதிப்பு  அதிகமாகவுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் சிக்கி கொண்ட இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகத்திற்குத் திரும்பியுள்ளனர். சீனாவில் சிக்கித்தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ttn

ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ள 324 பேரையும் 14 நாட்களுக்கு  மருத்துவ சிறப்பு முகாமில் வைத்து கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 324 இந்தியர்களில் 103 பேர் விமான நிலையத்திலிருந்து இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்  சாவ்லா முகாமுக்கு மருத்துவ கண்காணிப்புக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்