சீனாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா விமான பணியாளர்களுக்கு ஒரு வாரம் லீவு……

 

சீனாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா விமான பணியாளர்களுக்கு ஒரு வாரம் லீவு……

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சீனாவிலிருந்து இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களின் பணியாளர்கள் ஒரு வார விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு பல நூறு பேர் பலியாகி தொடங்கினர். இதனையடுத்து சீனாவில் தங்கியிருக்கும் இந்தியர்களை உடனடியாக பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக ஏர்  இந்தியா 2 சிறப்பு விமானங்களை இயக்கியது.

விமானத்தில் வந்த இந்தியர்கள்

சீனாவின் யுஹான் நகரிலிருந்து கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 647 இந்தியர்கள் மற்றும் 7 மாலத்தீவு நாட்டினரை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களில் டெல்லிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இந்த விமானங்களில் பணிபுரிந்த விமான பணியாளர்கள ஒரு வார விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

விமான பணியாளர்கள்

சீனாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கையில், 30 கேபின் பணியாளர்கள், 8 விமானிகள், 10 ஏர்இந்தியாவின் வர்த்தக பணியாளர்கள் மற்றும் ஏர் இந்தியாவின் சி.ஏ.டி. செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என மொத்தம் 64 ஈடுபட்டனர்.  ஏர் இந்தியாவின் செயல்பாட்டுகள் இயக்குனர், கேப்டன் அமிதாப் சிங் ஆகியோர் தலைமையில் இந்த குழு  செயல்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரு வார விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.