சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி! பிக்பாஸ் கவினின் தாயார் உட்பட அவரது குடும்பத்தினர் 3 பேருக்கு  7 ஆண்டுகள் சிறை!! 

 

சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி! பிக்பாஸ் கவினின் தாயார் உட்பட அவரது குடும்பத்தினர் 3 பேருக்கு  7 ஆண்டுகள் சிறை!! 

சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த புகாரில் பிக்பாஸ் புகழ் கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த புகாரில் பிக்பாஸ் புகழ் கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. இவர் தான் தற்போது பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள கவினின் தாயார். இவர் அதே பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்திவந்ததாக கூறப்படுகிறது. கடந்த  1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை சீட்டு கம்பெனி நடத்திவந்துள்ளார். 34 பேரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு யாருக்குமே பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. சீட்டு கம்பெனி ஏமாற்றியதாகவும், தாங்கள் கட்டிய 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்றுத்தரக்கோரியும் கடந்த  2007  ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் ராஜலெட்சுமி மீது புகார் அளிக்கப்பட்டது.

Kavin

இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவினின் தாயார் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. அனைவருக்கும் மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக 3000 ரூபாயும் விதிக்கப்பட்டது.