சீட்டும் இல்ல, தலைவர் ஸ்டாலினும் ஊர்ல இல்ல: தேமுதிக சுதீஷை கலாய்த்த துரைமுருகன்

 

சீட்டும் இல்ல, தலைவர் ஸ்டாலினும் ஊர்ல இல்ல: தேமுதிக சுதீஷை கலாய்த்த துரைமுருகன்

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சரிவராததால், திமுக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷை திமுக பொருளாளர் துரைமுருகன் கலாய்ச்சுருக்கார்.

சென்னை: அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சரிவராததால், திமுக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷை திமுக பொருளாளர் துரைமுருகன் கலாய்ச்சுருக்கார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் திமுக தரப்பு கூட்டணி பணியை  முடித்து தொகுதிகளை உறுதி செய்துவிட்டனர். தேமுதிக தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேமுதிக உடனான கூட்டணியை உறுதி செய்ய வந்தார் பாஜக அமைச்சர் பியூஷ் கோயல். தேமுதிக தரப்பு பாமகவை விட அதிக சீட்டு கேட்டுள்ளனர், அதிமுக தரப்பு 4 சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என கூறியிருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, தேமுதிகவினர் சிலரை திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியிருக்கிறார் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்.

தேமுதிகவினர் பேச்சுவார்த்தைக்கு துரைமுருகன் உடன்படவில்லை. உடனே துரைமுருகனுக்கு மொபைல் மூலம் அழைத்து பேசியிருக்கிறார் சுதிஷ். அதற்கு துரைமுருகன், உங்கள் கவுரவத்தை காப்பாற்றும் அளவு எங்களிடம் சீட்டு இல்லை. திமுக தலைமைதான் அதுபற்றி முடிவு எடுக்க வேண்டும், தலைவர் முக ஸ்டாலினும் இப்ப ஊர்ல இல்ல என்று கலாய்த்திருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் இந்த தகவலை பகிர்ந்துகொண்டார். மேலும் அவர், தேமுதிக தரப்பு மாற்றி மாற்றி பேசுகிறது, அதிமுக தரப்பில் விஜயகாந்த் இருப்பது போல் போஸ்டர் அடிக்கப்படுகிறது. அதன்பிறகு எங்களோடு வேற பேச்சுவார்த்தை நடத்த வராங்க, சம்திங் ராங் என தெரிவித்தார்.

முன்பு விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க சென்றதாக முக ஸ்டாலின் தெரிவித்ததை மறுத்து அரசியல் பேசப்பட்டது என பிரேமலதா கூறியதும், எங்கள் கட்சிக்கு வாக்கு வங்கி இல்லைனு சொன்னவங்க எல்லாம் எங்க வீட்டு வாசல்ல நிக்கிறாங்கனு விஜய பிரபாகரன் திமுகவ குத்தி பேசியதும்தான் துரைமுருகன் இப்படி பேசியதற்கு காரணம்னு பொது வெளியில் கூறப்படுகிறது. இப்ப தேமுதிக நிலைமைதான் இப்ப ரொம்ப மோசமா இருக்கு, சுதிஷ் இப்ப ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறார்.