சீக்கிரம்… சீக்கிரம்…. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யுங்க.. இன்னும் 2 நாள் தான் இருக்கு… இல்லன்னா அபராதம்

 

சீக்கிரம்… சீக்கிரம்…. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யுங்க.. இன்னும் 2 நாள் தான் இருக்கு… இல்லன்னா அபராதம்

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீடித்தது. இறுதியாக வரும் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் இதற்கு மேல் காலஅவகாசம் கிடையாது என கண்டிப்பாக கூறிவிட்டது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான  வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களை உள்ளன. இதனால் பலர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் தீவிரமாக உள்ளனர். வருமான வரிக் கணக்கை தாமதமாக செலுத்தினால் அபராதம் செலுத்த வேண்டும். வரி பிடித்தம செய்யப்பட்டவர்களுக்கு உரிய தேதியில் வருமான வரி தாக்கல் செய்தால்தான் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும்.

பான் எண் ஆதாருடன் இணைப்பு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் எண் அவசியம். இருப்பினும் பான் எண் இல்லை என்றால் தங்களது ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், செப்டம்பர்  முதல் ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செல்லாது. அதனால இன்னும் 2 நாளைக்குல பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விடுங்கள்.