சீக்கிய கலவரத்துக்கு நரசிம்ம ராவ் தான் காரணம் என பேசிய மன்மோகன் சிங்! வறுத்தெடுத்த பா.ஜ.க.

 

சீக்கிய கலவரத்துக்கு நரசிம்ம ராவ் தான் காரணம் என பேசிய மன்மோகன் சிங்! வறுத்தெடுத்த பா.ஜ.க.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் தான் என்பது போலவும், ராஜீவ் காந்திக்கு அதற்கும் சம்பந்தம் இல்லாத போல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருந்தார். அதற்கு பா.ஜ.க. கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

1984 அக்டோபர் 31ம் தேதியன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது வெறுப்பு உணர்வு மற்றும் வெறி உணர்வு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கலவரங்களில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பல பத்தாண்டுகள் கடந்த பிறகும் அந்த கலவரத்தின் தாக்கம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்

அதற்கு சமீபத்திய உதாரணம், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மறைந்த ஐ.கே. குஜ்ரால் தொடர்பான விழாவில் மன்மோகன் சிங் சீக்கிய கலவரம் குறித்து பேசியதும், அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுதான். இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து, ஏராளமான ராணுவத்தை குவிக்குமாறு ஐ.கே. குஜ்ரால் சொன்ன ஆலோசனையை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் ஏற்க மறுத்து விட்டார். அதனை ஏற்று கொண்டு இருந்தால் கலவரங்கள் நடந்து இருக்காது என சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு காரணம் நரசிம்ம ராவ் என்பது போல் என அந்த விழாவில் மன்மோகன் சிங் பேசி இருந்தார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்

மன்மோகன் சிங் கூறிய கருத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சீக்கிய கலவரத்தில் ராஜீவ் காந்திக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் மன்மோகன் சிங் என பா.ஜ.க. குற்றச்சாட்டியது இது தொடர்பாக பா.ஜ.க.வின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், அப்போது ராஜீவ் காந்திதான் பிரதமராக இருந்தார். அவர்தான் நாடு முழுவதும் கலவரம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  நரசிம்ம ராவை காட்டிலும் ராஜீவ் காந்திக்குதான் படைகளை குவிக்க உத்தரவிட அதிகாரம் உண்டு. மேலும் பெரிய மரம் விழும்போது பூமி அதிர்வது இயல்பு என சீக்கிய கலவரம் குறித்து கருத்து தெரிவித்தன் மூலம் பெரிய படுகொலைகளுக்கு அவர் ஆதரவு அளித்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.