சி.ஏ படிப்புக்கு இலவச கோச்சிங் : அமைச்சர் செங்கோட்டையன்

 

சி.ஏ படிப்புக்கு இலவச கோச்சிங் : அமைச்சர் செங்கோட்டையன்

சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 

minister

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “இந்தியாவிலேயே முதன் முறையாகப்  பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்புக்கான இலவச பயிற்சி தமிழகத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் சுமார் 21 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு சார்பில் கோச்சிங் வழங்கப்படவுள்ளது. அதன் படி, ஒரு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பட்டயக் கணக்காளர்களை உருவாக்க முடியும். இந்தியாவில் மொத்தம் 21 ஆயிரம் பட்டயக் கணக்காளர்கள் தேவை. ஆனால், 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.