சி.ஏ.ஏ-வை திரும்பப் பெற பா.ஜ.க முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரை!

சி.ஏ.ஏ-வை திரும்பப் பெற பா.ஜ.க முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அரசு ஆதரவுடன் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கோரியும் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரையை இன்று தொடங்குகிறார்.

பா.ஜ.க மூத்த தலைவராக இருந்தவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா மும்பையில் இன்று மிகப்பெரிய யாத்திரையைத் தொடங்குகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையிலிருந்து டெல்லிக்கு மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா வழியாக 3000 கி.மீ தூரத்துக்கு இந்த யாத்திரையாக செல்கிறார்.

3000-km-yatra

காந்தி ஷாந்தி யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ம் தேதி டெல்லி ராஜ் காட்டை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை கேட் வே ஆஃப் இந்தியா அருகில் இந்த யாத்திரையை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தொடங்கி வைக்கிறார்.
யஷ்வந்த் சின்ஹாவுடன் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா, விதர்பா காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் தேஜ்முக் உள்ளிட்டவர்களும் செல்கின்றனர். 
இது குறித்து இந்த தலைவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டில் எல்லோருமே தொந்தரவு செய்யப்பட்டுள்ளார்கள். கல்வித் துறை தொந்தரவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீர்கெட்டுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநிறுத்தக் கோரி இந்த யாத்திரை செல்கிறோம். ஜே.என்.யூ-வில் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர்… இதன் மூலம் பாதிப்புக்குள்ளானவர்கள் மிரட்டப்பட்டு புதிய இயல்புநிலை என்ற ஒன்றைக் கொண்டுவர பார்க்கின்றனர்” என்றனர்.