சிவப்பு விளக்கையும்  அணைத்த கொரானா -பாலியல் தொழிலில் பயங்கர வீழ்ச்சி -கஸ்டமர் இல்லாமல் கஷ்டப்படும் சோனாகஞ்ச்..   

சிவப்பு விளக்கையும்  அணைத்த கொரானா -பாலியல் தொழிலில் பயங்கர வீழ்ச்சி -கஸ்டமர் இல்லாமல் கஷ்டப்படும் சோனாகஞ்ச்..   

ஆசியாவின் மிகப் பெரிய சிவப்பு விளக்கு பகுதி – சோனா கஞ்ச் – ஞாயிற்றுக்கிழமை  வெறிச்சோடி காணப்பட்டது. 
எவ்வாறாயினும், இந்த பாலியல் தொழிலாளர்களில் பலர் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் மேலும் இப்போதைக்கு அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் இது  செலவினங்களைக் குறைதுள்ளதாக கூறுகிறார்கள். 

கொரானா பயத்தால் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகள் வாடிக்கையாளர்கள் வராததால் கடும் சரிவைக் கண்டன. ஆசியாவின் மிகப் பெரிய சிவப்பு விளக்கு பகுதி – சோனா கஞ்ச் – ஞாயிற்றுக்கிழமை  வெறிச்சோடி காணப்பட்டது. 
எவ்வாறாயினும், இந்த பாலியல் தொழிலாளர்களில் பலர் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் மேலும் இப்போதைக்கு அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் இது  செலவினங்களைக் குறைதுள்ளதாக கூறுகிறார்கள். 

kolkata

“இது இப்போது பழைய சோனகாச்சி போல் இல்லை. ஹோலிக்குப் பின்னர் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வருகிறது. பொதுவாக, ஒவ்வொரு நாளும் குறைந்தது 20,000 வாடிக்கையாளர்கள்  வருவார்கள், ஆனால் இந்த கொரோனா வைரஸ் பயத்தால் மக்கள் வருவது குறைந்து விட்டது .
இப்போதெல்லாம், 500 க்கும்குறைவான  வாடிக்கையாளர்கள்தான் வருகிறார்கள்” என்று பாலியல் தொழிலாளர்கள் அமைப்பான தர்பார் மஹிலா சமன்வயா குழுவின் செயலாளர் கஜோல் போஸ் கூறினார்.

corona

“சோனகாச்சியில் எங்களிடம் 12,000 பெண்கள் உள்ளனர், ஆனால் தற்போது 10 சதவீதம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஷியோராபுலி, டோம்ஜூர், உலுபீரியா, கல்னா, சாந்திபூர், டின்ஹாட்டா, பஞ்சிபாரா, கூச்ச்பெஹார் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளில் வழக்கமான வாடிக்கையாளர்கள் ரெட்லைட் பகுதிகளுக்கு வருவதை நிறுத்திவிட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

kolkata

“நாங்கள் இப்போது  ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். கொரோனா வைரஸ்  காரணமாக வாடிக்கையாளர்கள் வருவதை நிறுத்திவிட்டனர். முன்பு, ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு வாடிக்கையாளர்களாவது வருவார்கள். இப்போது, யாருமே வராமல் கஷ்டப்படுகிறோம், ”என்று ஹால்டர் என்ற பாலியல் தொழிலாளர் கூறினார்.