சிவப்பு மண்டல பகுதியில் ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் – முதலமைச்சர் பழனிசாமி 

 

சிவப்பு மண்டல பகுதியில் ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் – முதலமைச்சர் பழனிசாமி 

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறைந்து, கொரோனா பரவல் இல்லாத சூழல் கண்டிப்பாக வரும் என்று கூறினார். ஏப்ரல் 20 ஆம் தேதிக்குபின் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

ttn

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆம் கட்டத்திலேயே தொடர்ந்து இருப்பதாக தெரிவித்த அவர், கொரோனா கட்டுக்குள் வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் சிவப்பு மண்டல பகுதியில் ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, திருச்சி, தேனி, கரூர், ராணிப்பேட்டை, மதுரை, திருவள்ளூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டல பகுதிகளாகும்.