சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எல்லாரும் நாளைக்கு ரெடியா இருங்க பாஸ்! 

 

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எல்லாரும் நாளைக்கு ரெடியா இருங்க பாஸ்! 

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் லுக் நாளை வெளியாகியுள்ளது. 

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் லுக் நாளை வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிஸ்டர் லோக்கல். அதைத்தொடர்ந்து தற்போது பாண்டி ராஜ் இயக்கும் படத்திலும் இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்திலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில்  பாண்டி ராஜ் இயக்கும் படத்திற்கு நம்ம விட்டு மாப்பிள்ளை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

sivakarthikeyan

அதில் சிவகார்த்திகேயன் லுக் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகக் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் விரைவில் படத்தைப் பற்றிய மற்ற அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.