சிவகார்த்திகேயன் முதல் கவின் வரை…. விஜய் டிவியின் அடுத்த ஹீரோ ரெடி!

 

சிவகார்த்திகேயன்  முதல் கவின் வரை…. விஜய் டிவியின் அடுத்த ஹீரோ ரெடி!

ஏற்கனவே நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில்,  தற்போது மீண்டும் ஒரு புதிய  படத்தில் நடிக்கிறார்

இயக்குநர் பாரதி கணேஷ்  இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரபல டிவி  தொகுப்பாளரான கோபிநாத் ஒப்பந்தமாகியுள்ளார். 

gopi

சமூக கருத்துகளை முன்வைத்து நடத்தப்படும் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் ஏற்கனவே நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில்,  தற்போது மீண்டும் ஒரு புதிய  படத்தில் நடிக்கிறார். இயக்குநர் பாரதி கணேஷ்  “இது எல்லாத்துக்கும் மேல”  படத்தில் முன்னணி  கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இவருடன் நடிகர் சதீஷ்,  அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர்.

gopinath

பிள்ளைகள்  வளர்ப்பு குறித்துப் பேசும் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.