சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கும் ‘டாக்டர்’ படக்குழு!

 

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கும் ‘டாக்டர்’ படக்குழு!

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவா கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டாக்டர்’. இந்த படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டாக்டர்’. இந்த படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

doctor-poster

 

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிப்பதாக  தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று காலை 11.03 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

‘டாக்டர்’ படத்தையடுத்து சிவகார்த்திகேயன் ‘அயலான்’ என்று தலைப்பிடிப்பட்ட சயின்ஸ் திரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இந்த  படத்தை இயக்குகிறார். அடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.