சிவகங்கை மாவட்ட மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு !

 

சிவகங்கை மாவட்ட மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு !

மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும்,  9624 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கும் இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது. மறைமுக தேர்தல் காலை, மாலை என இரண்டு வேளைகளாக பிரிக்கப்பட்டு மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு இன்று 11 மணிக்கும் மற்ற பதவிகளுக்கு மாலை 3.30 மணிக்கும் நடைபெற உள்ளது. 

ttn

அதன் படி, மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை என்று கூறி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தேர்தலை  காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளார். அதே போல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  பரமத்தியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கு 4 பேர் மட்டுமே வந்துள்ளதால் தேர்தல் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.