சில்லுக்கருப்பட்டி இயக்குநருக்கு மகளிர் தினத்திற்கு கிடைத்த பரிசு…யார் கொடுத்தது தெரியுமா?

 

சில்லுக்கருப்பட்டி இயக்குநருக்கு மகளிர் தினத்திற்கு கிடைத்த பரிசு…யார் கொடுத்தது தெரியுமா?

நடிகர்கள் சமுத்திரகனி, சுனைனா,  சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

இயக்குநர் ஹலிதா ஷமீமின்  ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு விதமான  குறுங்கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்  நடிகர்கள் சமுத்திரகனி, சுனைனா,  சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

ttn

குறிப்பாக   மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என 4  ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ள இப்படத்தை டிவைன் புரொடக்ஷன் சார்பில் வெங்கடேஷ் வேலினீனி  தயாரித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா இதன் உரிமத்தை வாங்கினார்.  இதனால் உலகளவில் 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியாகி பிரபலங்களின் பாராட்டைப்  பெற்றது.

இந்நிலையில் ஹலிதா ஷமீமிற்கு அவரது ரசிகர் ஒருவர் மகளிர் தினத்திற்காக பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இவர் பாஸ்கர். நான் இவரை பெங்களூர் ஃபிலிம் பெஸ்டிவலில் சந்தித்தேன். மகளிர் தினத்துக்காக உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். என் படத்தின் உண்மையான வெற்றி, பல நல்ல மனிதர்களுடன் நான் ஒன்றிணைவதே’ என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இதற்கான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.