சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை; தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை; தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

சென்னை: சிலை கடத்தல் வழக்கின் விசாரணையை சிபிஐ-கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.


pon manickavel


இதனையடுத்து, சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


tn Sec


இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய அரசாணை ரத்தை உறுதி செய்தும், சிலை கடத்தல் வழக்கின் விசாரணையை பொன் மாணிக்கவேல் மேற்கொள்ள தடை இல்லை எனவும் உத்தரவிட்டது. அத்துடன், விசாரணையின் போது கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள பொன்.மாணிக்கவேலுக்கு தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதையும் வாசிங்க


வோட்டர் ஐடி இல்லாததால் வாக்கு சாவடியில் துப்பாக்கி சூடு!? நடந்தது என்ன?