சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஐஜி அபய்குமார் சிங்: தமிழக அரசு அறிவிப்பு

 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஐஜி அபய்குமார் சிங்: தமிழக அரசு அறிவிப்பு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐஜியாக அபய்குமார் சிங் நியமிக்கப்படுகிறார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐஜியாக அபய்குமார் சிங் நியமிக்கப்படுகிறார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஐஜி பொன் மாணிக்கவேல் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவர் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட ஏராளமான சிலைகளை மீட்டார். இதனால் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார். ஆனால் ஐஜி பொன். மாணிக்கவேல் இன்று முதல் தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐஜியாக அபய்குமார் சிங் நியமிக்கப்படுகிறார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அபய்குமார் சிங் தமிழ்நாடு காகித நிறுவன லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.