சிலம்பம் ஆடி பிறந்தநாள் கொண்டாடிய சாய் தன்ஷிகா!

 

சிலம்பம் ஆடி பிறந்தநாள் கொண்டாடிய சாய் தன்ஷிகா!

பிறந்தநாளில் சிலம்பம் சுற்றி அசத்திய சாய் தன்ஷிகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: பிறந்தநாளில் சிலம்பம் சுற்றி அசத்திய சாய் தன்ஷிகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திரை பிரபலங்கள் தங்களது பிறந்தநாள் பார்ட்டியை 5 ஸ்டார் ஹோட்டல்களிலும், மாற்று திறனாளிகளின் பள்ளிகளிலும், ஆதரவற்ற விடுதிகளிலும் கொண்டாடுவது வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக நடிகை சாய் தன்ஷிகா, தனது பிறந்தநாளை, தனக்கு சிலம்பம் கற்பித்த ஆசனின் பயிற்சி கூடத்தில் கொண்டாடியுள்ளார்.

சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை கற்பித்த பாண்டியன் மாஸ்டரின் பயிற்சி கூடத்திற்கு சென்ற நடிகை சாய் தன்ஷிகா, அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து அவர்களுக்கு விருந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சிலம்பம் எடுத்து சுழற்றிய சாய் தன்ஷிகா, அனைவரையும் அசரவைத்தார். 

தமிழ் பாரம்பரிய கலைகளை இங்கு தான் கற்றேன். தன்னம்பிக்கையும், துணிச்சலையும் கற்றேன். இந்த இடம் எனக்கு கோவில் மாதிரி. அதனால் தான் என் பிறந்தநாளை இங்கு கொண்டாடினேன் என சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.