சிறையில் சோக கீதம் வாசிக்கும் செய்தி வாசிப்பாளர் ! கள்ளக்காதல் செய்திகளையே வாசித்ததால் பரிதாபம் !

 

சிறையில் சோக கீதம் வாசிக்கும் செய்தி வாசிப்பாளர் ! கள்ளக்காதல் செய்திகளையே வாசித்ததால் பரிதாபம் !

கள்ளக் காதல் செய்திகளை வாசித்து வாசித்து முறையற்ற உறவை தேடி சென்ற ஒரு செய்தி வாசிப்பாளர் தற்போது சிறையில் வாசித்துக் கொண்டிருக்கிறார் சோக கீதத்தை.

கள்ளக் காதல் செய்திகளை வாசித்து வாசித்து முறையற்ற உறவை தேடி சென்ற ஒரு செய்தி வாசிப்பாளர் தற்போது சிறையில் வாசித்துக் கொண்டிருக்கிறார் சோக கீதத்தை.
 

உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்படும் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அஜிதேஷ் மிஸ்ராவுக்கும் திவ்யா என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அவர் பணிபுரியும் இடத்தில் பாவனா என்பவரை காதலித்து வந்த நிலையில் அதை மறைத்து திவ்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் அஜிதேஷ். அசதிக்கு ஒன்று, வசதிக்கு ஒன்று என காலத்தை ஓட்ட நினைத்த அஜிதேஷ் மனைவியை கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமணம் ஆன சில மாதங்களில் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த திவ்யா அவர் வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற வாழ்வு வாழ்வதை கண்டுபிடித்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜிதேஷ் திவ்யாவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டு தன்னுடைய நண்பனை துணைக்கு அழைத்தார். அஜிதேஷ் வீட்டில் இல்லாதபோது அவரை தேடி வந்ததுபோல் வந்த நண்பர் அகில்குமார் வீட்டில் இருந்த பூச்சட்டியால் திவ்யாவின் தலையில் ஓங்கி அடித்த்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

newsreader1

பின்னர் ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்ற அஜிதேஷ் தன்னுடைய மனைவியை யாரோ கொன்றுவிட்டதாக நாடகம் ஆடினார். ஆனால் போலிசாரிடன் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்தான் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத் அந்த ஊர் உள்ளூர் தலைப்பு செய்திகளில் அஜிதேஷ், நண்பர் அகில்குமார், காதலி பாவனா ஆகியோர் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

குற்றவாளிகள் இருவர் மட்டுமே என்ற நிலையில் பாவனாவை ஏன் கைது செய்தார்கள் என்ற உங்கள் கேள்விக்கு சட்டம் பதில் அளிக்கும். எனவே அடுத்தவர் வாழ்க்கையில் அனாவசியமாக பெண்கள் தலையிடாமல் இருந்தால் வாழ்க்கை முழுவதும் ஆபிசுக்கு மட்டும் செல்லும் நிலை ஏற்படும். இல்லையென்றால் சிறைக்கு செல்ல நேரிடும்.

இந்த செய்தியை படித்துவிட்டு இதேபோல ஒரு சம்பவம் தமிழ்த் தொலைக்காட்சியிலும் நடந்துச்சு என்று நண்பர்களுடன் பேச ஆரம்பிக்க வேண்டாம்… புது பிரச்சனை வரும்போது பழைய பிரச்சனைகளை மறப்பதுதான் நேயர்களின் மரபு.