சிறையில் சசிகலா இருப்பது வேதனை! – ராஜேந்திர பாலாஜியின் திடீர் பாசம்

 

சிறையில் சசிகலா இருப்பது வேதனை! – ராஜேந்திர பாலாஜியின் திடீர் பாசம்

சசிகலா சிறையில் இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி, மத்திய அரசை ஆதரித்து கருத்து தெரிவித்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் ராமானுஜ ஜீயரை அமைச்சர் பாலாஜி இன்று சந்தித்து பேசினார்.

சசிகலா சிறையில் இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி, மத்திய அரசை ஆதரித்து கருத்து தெரிவித்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் ராமானுஜ ஜீயரை அமைச்சர் பாலாஜி இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

sasikala

தற்போதுள்ள சூழ்நிலையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஜீயருடன் பேசினேன். ஆண்டாள் கோவில் நிலங்களைத் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஜீயர் கூறினார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தெரிவித்தேன். கோவில் இடத்தில் உட்கார்ந்துகொண்டு இந்து மதத்தைத் தவறாக பேசுபவர்களை வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம்” என்றார்.
தந்தை பெரியார் பற்றி ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ரஜினி பெரியார் பற்றி தவறாக எதையும் பேசவில்லை. பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. நடந்த நிகழ்வை மட்டுமே ரஜினி கூறினார். பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றக்கொள்ளட்டும், பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்துகொள்ளட்டும். எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது” என்றார்.
சசிகலா பற்றிக் கேட்டபோது, “அவர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. அவர் வர வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர் வெளியே வந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறினார்.
பெரியார் பற்றிய ரஜினியின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜியின் இந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.