சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

 

சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகையும் காங்கிரஸ் கட்சியின், நட்சத்திர பேச்சாளருமான விஜயசாந்தி சந்தித்துள்ளார்.

பெங்களூர்:  சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகையும் காங்கிரஸ் கட்சியின், நட்சத்திர பேச்சாளருமான விஜயசாந்தி சந்தித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார். பின்னர்   அக்கட்சியில் இருந்து விலகி, தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் இந்தக் கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைத்தார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆன இவர்  2014 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

vijaysanthi

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை விஜயசாந்தி நேற்று சந்தித்தார். இருவரின் சந்திப்பும் சுமார் 1மணிநேரம் வரை நீடித்தது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டதாகவும், கட்சியினருடன் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக சசிகலா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

நடராஜன் மறைந்தபோதும் சசிகலாவைச் சந்தித்து விஜயசாந்தி ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.