சிறு குழந்தைகள் மீது கைவைத்தால் நாக்கு வெளியே பிதுங்க தூக்கில் போடணும்!

 

சிறு குழந்தைகள் மீது கைவைத்தால் நாக்கு வெளியே பிதுங்க தூக்கில் போடணும்!

கோவை துடியலூர் பகுதியில் தங்கையோடு விளையாடச்சொன்ற ஏழு வயது சிறுமி காணாமல் போகிறாள். பின்னர் கை கால்கள் கட்டப் பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்படுகிறாள்.

கோவை: கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் என்பவருக்கு 6 வயதான ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். சிறுமி படிக்கும் பள்ளி அருகாமையிலேயே இருந்ததால் பள்ளிக்கு தானே சென்று பின்பு வீடு திரும்புவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அப்பகுதியில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை, தேடும் பணியில் தீவிரம் காட்டினர். பின்னர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்படுகிறாள். பிரதே பரிசோதனையில் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற இன்னொரு அதிர்ச்சியான விஷயம் வெளியே தெரிகிறது.

ஈவு இரக்கமற்ற குற்றவாளிகள்

abuse

சிறுமியின் தாயார் சந்ததேப்பட்டு சொன்ன ஐந்துபேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதெல்லாம் வழக்கமான நடைமுறை.. இங்கேதான் மாற்றம் தேவை..

மாநிலமே அதிர்ந்து போயிருக்கும் இதுபோன்ற வழக்குகளில் போலீசாரும் நீதித்துறையும் பழைய பாணியையே கடைப்பிடித்தால், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற ஈவு இரக்கமற்ற குற்றவாளிகள் நீண்டகாலம் இம்மண்ணில் உயிரோடு உலவும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

புலனாய்வு அதிகாரி, மருத்துவ நிபுணர் ஆலோசனை

crime

ஆகையால் புலன் விசாரணையில் உள்ளுர் போலீசாருக்கு உதவும் வகையில் மாநில அளவில் திறமை மிக்க புலனாய்வு அதிகாரி, மருத்துவ நிபுணர் போன்றோரின் ஆலோசனையை நேரில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை வைத்து தப்பி விடாமல் இருக்க, குற்றப்பத்திரிகை தயாரிப்பில் மிகமிக திறமை வாய்ந்த சட்ட நிபுணரின் ஆலோனையையும் கொடுக்கவேண்டும்..

கைது நடவடிக்கையில் காட்டுகிற வேகத்தைவிட பல மடங்கு வேகத்தை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை விசாரணைக்கு கொண்டு செல்வதில் காட்டவேண்டும்.

தீர்ப்பை சொல்லியே ஆகவேண்டும் என்ற வரைமுறை

judgement

அப்புறம் நீதித்துறை.. செசன்ஸ், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், ஆகிய கட்டங்களில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்குகளை இந்த காலகட்டத்திற்குள் விசாரித்து தீர்ப்பை சொல்லியே ஆகவேண்டும் என்று வரைமுறை வைத்துக்கொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து, கருணை மனுவந்தால் ஜனாதிபதி கவிழ்ந்து படுத்துக் கொண்டு தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது.

பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கிய பெருமை

suicide

அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் பலாத்கார குற்றவாளிகள் தூக்கில் ஏற்றி கொல்லப்ப்டடால், மக்கள் இந்த விஷயத்தை மறந்துபோவதற்குள் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கிய பெருமை இந்த நாட்டைச் சேரும்..

சிறார்கள் மீது கைவைத்தால் ஆறுமாதத்தில் நாக்கு வெளியே பிதுங்க தூக்கில் தொங்கவிட்டுவிடுவார்கள் என்ற பயம், பலருக்கும் இருக்கும்..

தண்டிக்கப்படுவதில் ஏற்படும் காலதாமதம்தான். தீர்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற திமிர் தனத்தை குற்றம் செய்பவர்களுக்கு கொடுக்கிறது.

இதையும் வாசிக்க:  சிறுவனை அடைத்து வைத்து 4 நாட்கள் பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியை: மதுரையில் பரபரப்பு!