சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள்… கூகுளுக்கு ரூ.1200 கோடி அபராதம்!  

 

சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள்… கூகுளுக்கு ரூ.1200 கோடி அபராதம்!  

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தகவல்களை அவர்களது பெற்றோரின் ஒப்புதல் இன்றி யூடியூப்பில் பயன்படுத்தியதாக கூகுள் நிறுவனத்திற்கு சுமார் 1200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

youtube

யூடியூப் செயலியை பயன்படுத்தும் 12 வயதுகுட்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களது பெற்றோர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த தகவல்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் குற்றம்சாட்டியது. 

google

இந்த புகாரை விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் விதிகளை மீறியதாக யூ டியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்திற்கு 1200 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது. இந்த தொகை கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை ஒப்பிடும் போது மிகக்குறைவுதான் என்றாலும் சிறுவர்களின் தகவல்களை திருடியது பெருங்குற்றமாக பார்க்கப்படுகிறது.