சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

 

சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கை அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: இலங்கை அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக தலைவர் மு..ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி கடந்த மாதம் 26ம் தேதி சிறிசேன உத்தரவிட்டார். தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்த அவர், நாடாளுமன்றத்தை முடக்கி அறிவிப்பு வெளியிட்டார்

ஆனால் ரணில்தான் பிரதமராக நீடிப்பார் என அந்நாட்டுச் சபாநாயகர், கரு.ஜெயசூரியா கூறி வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும், அன்றைய தினம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், ராஜபக்ச தரப்பினர் வெளிப்படையாகவே குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ரணில் விக்ரமசிங்கே தரப்பு குற்றம்சாட்டியது.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டிய சூழலில், ராஜபக்சேவால் போதிய ஆதரவைப் பெற முடியவில்லை. இதனையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவில் நேற்றிரவு அதிபர் மைத்ரி பால சிறிசேன கையெழுத்திட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான மனுத்தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் நிலவரம் குறித்து திமுக தலைவர் மு..ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை. இனியும், மோடி அரசு மவுனம் காக்காமல் தமிழர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.