சிறந்த ஈவினிங் ஸ்னாக்ஸ்- பொறித்த சோளம்… வீட்டிலேயே செய்யலாம்

சிறந்த ஈவினிங் ஸ்னாக்ஸ்- பொறித்த சோளம்… வீட்டிலேயே செய்யலாம்

பீச் , காய்கறிகளை விற்கும் சூப்பர்  மார்க்கெட்  என  எல்லா  இடங்களிலும் மக்காச் சோளத்தை  ஆவியில் வேகவைத்தோ சுட்டோ விற்பதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இதை  விரும்பிச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இது சாப்பிட  சுவையாக  இருக்கு  என்பதற்காக  வாங்கி  சாப்பிடுபவர்களே  அதிகம் . அதில் நம்  உடலுக்கு  ஆரோக்கியத்தை உண்டாக்கும்  பல  நன்மைகள் உண்டு  என்பது பலருக்கும் தெரிந்திருக்க  வாய்ப்பில்லை! 

corn

இது இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. வைட்டமின் பி 12, ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்பு சத்து ஆகியவை அதிகம் இருப்பதால் இவை உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகின்றன.இரத்ததில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.உடலை வலிமைப்  படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் உடல் எடை குறைக்க நினைத்தால் சோளத்தை மிஸ் பண்ணாதீங்க.தவிர, இது கர்ப்பகாலத்தில் சாப்பிட ஏற்ற உணவாகவும் சருமத்தை பாதுக்காகவும்  உதவும். இவ்வளவு நன்மைகளைக்  கொண்ட சோளத்தை வைத்து ஒரு சுவையான ஈவினிங் ஸ்னாக்ஸ்  எப்படிச்  செய்வதென்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

சோளம் – 2 
கார்ன் மாவு – 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் 

corn

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் 
வெங்காயம் – 1 மீடியம் அளவு 
பூண்டு – 1/2 ஸ்பூன் நன்கு நறுக்கியது 
கொத்துமல்லி – 2 ஸ்பூன் 

onion

லெமன் ஜூஸ்- 1 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

சோளத்தை நன்கு  கழுவி வேகவைத்து அதை தண்ணீர் இல்லாமல் நன்கு உலர்த்தி, பிறகு அதில் கார்ன் மாவு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

corn

பின்னர் மசாலா தயாரிக்க வெங்காயம்,பூண்டு ஆகியவைகளை வதக்கி அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு ஆகியவைகளை சேர்த்து வறுத்த சோளத்தை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு, லெமன் ஜூஸ் சேர்த்து இறுதியாக கொத்துமல்லியை தூவி செர்வ் செய்யவும்.

corn fry

ஈவினிங் டயத்தில் எல்லாருக்கும் பிடித்தமான இந்த அட்டகாசமான கார்ன் ரெசிபியை செய்து சாப்பிடுங்கள்!