சிரஞ்சீவி – விஜய் சேதுபதி மெகா கூட்டணியில் இணைந்த கமல் ஹாசன்

 

சிரஞ்சீவி – விஜய் சேதுபதி மெகா கூட்டணியில் இணைந்த கமல் ஹாசன்

உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை  வாழ்க்கை  வரலாற்றுப் படமான இதில் விஜய் சேதுபதி  ராஜபாண்டி எனும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.  

நடிகர் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி  படத்துக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

chiran

தெலுங்கில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுஷ்கா, அமிதாப் பச்சன் , நயன்தாரா, தமன்னா ,  சுதீப், ஜகபதி பாபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை  வாழ்க்கை  வரலாற்றுப் படமான இதில் விஜய் சேதுபதி  ராஜபாண்டி எனும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.  இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்  தயாரித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  

chiranjeevi

இந்நிலையில் இப்படத்தின்  அறிமுக காட்சிகளுக்கு  தமிழில் நடிகர் கமல் ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அதேபோல்  மலையாளத்தில்  நடிகர் மோகன்லாலும் தெலுங்கில் பவன் கல்யாணும் பேசியுள்ளனர். மேலும் தமிழில் சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த்சாமி டப்பிங் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது