சிரஞ்சீவி படம் பார்த்த 7 போலீசார் சஸ்பெண்ட்! ஆந்திராவை அதிர வைத்த உத்தரவு!

 

சிரஞ்சீவி படம் பார்த்த 7 போலீசார் சஸ்பெண்ட்! ஆந்திராவை அதிர வைத்த உத்தரவு!

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு கோடிக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்ற வாரம் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ ஒரே சமயத்தில் ரிலீசானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்திருந்த இந்த படம், 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு கோடிக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்ற வாரம் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ ஒரே சமயத்தில் ரிலீசானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்திருந்த இந்த படம், 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. பெரிய இடைவெளிக்குப் பின்னர் சிரஞ்சீவி மீண்டும் திரையுலகில் நடித்துள்ளதால் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இப்படத்தின் ரிலீசை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்து கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீசான திரையரங்குகளில் எல்லாம் முதல் நாளே படத்தைப்  பார்த்து விடும் ஆவலில் ரசிகர்கள் குவிந்தனர்.

police

பலதரப்பிலும் ரசிகர்களைக் கொண்டிருந்த சிரஞ்சிவியின் படத்தை முதல் நாளே பார்த்து விடுவதற்காக கோலிமிகுண்டா பகுதியை சேர்ந்த பந்தி ஆத்மகுர், மற்றும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசாரும் முதல் நாளே தியேட்டருக்கு சென்றிருந்தனர். அங்கு நண்பர்களுடன் அவர்கள் மகிழ்ச்சியாக ஆடிய போட்டோ மற்றும் வீடியோக்களையும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தனர். சமூக வலைத்தளங்களில் வைரலான இவர்களது கொண்டாட்டங்கள்,  உயரதிகாரிகளின் பார்வைக்கும் சென்று அந்த ஏழு பேரையும் சஸ்பெண்ட் செய்து விட்டனர்.
ஒரு சினிமா பார்த்ததுக்காகவா சஸ்பெண்ட் செய்வாங்க? என்று நீங்கள் கேட்பது நியாயம் தான்… ஆனா போலீசாக இருந்துக் கொண்டு, தங்கள் பணியைச் செய்யாமல் இவர்கள் ஏழு பேரும் டூட்டியைக் கட்டடித்து விட்டு  சிரஞ்சீவி படத்திற்குப் போய் இருக்கிறார்கள். பொது விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே போலீஸ் பணியில் இருக்க வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முன்னதாகவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் ஏழு பேரும் பணியை செய்யாமல் சிரஞ்சீவியின் மீதுள்ள ஆசையில் தியேட்டருக்கு சென்றுவிட்டனர். பணிக்கு விடுப்பும் எடுக்கவில்லை.. .உயரதிகாரிகளிடம் அனுமதியும் பெறவில்லை.