சிரஞ்சீவி குடும்பத்திற்கு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா?

 

சிரஞ்சீவி குடும்பத்திற்கு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

சென்னை:  நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ போன்ற திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அதையடுத்து தமிழில் ஹீரோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். 

 விஜய் தேவரகொண்டா

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின், மகள் நிஹாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிஹாரிகா தமிழ் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

vijay devarakonda

மேலும் விஜய் தேவரகொண்டா, நிஹாரிகா திருமண பேச்சு எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. இதை சிரஞ்சீவி குடும்பத்தாரோ,விஜய் தேவரகொண்டாவோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பதால் அது வதந்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதோ!