சியோமி எம்ஐ வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம்

 

சியோமி எம்ஐ வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம்

பெய்ஜிங்: சியோமி நிறுவனத்தின் Mi வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் அறிமுகமான காலகட்டத்தில் அதை சார்ஜ் செய்ய நிறைய நேரம் பிடிக்கும். அதை தொடர்ந்து, வேகமாக சார்ஜ் ஆகும் ஃபாஸ்ட் சார்ஜர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பேட்டரிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சியோமி நிறுவனம் அந்தப் பெருமையை தட்டிச் சென்றுள்ளது. எம்ஐ வயர்லெஸ் சார்ஜர் என்று அழைக்கப்படும் இந்த சார்ஜர் அதிகபட்சம் 10 வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும்.

இதில் டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் மற்றும் ஓவர்-வோல்டேஜ் ப்ரோடெக்ஷன் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜரின் மேல்பக்கம் சிலிகான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வயர்லெஸ் சார்ஜிங் தூரம் 4எம்.எம். வரை இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் கேசில் இருந்து எடுத்தாலும் சார்ஜ் ஆகும். இந்த வயர்லெஸ் சார்ஜரில் யு.எஸ்.பி. டைப்-சி இன்டர்ஃபேஸ் மற்றும் அதிகபட்சம் 40 டிகிரி வரையிலான வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது. புதிய சார்ஜருடன் யு.எஸ்.பி. டைப்-சி யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்படுகிறது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.721 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே விற்பனை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.