சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது..!

 

சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது..!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ரிலீசாகவுள்ளது.

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ரிலீசாகவுள்ளது.

’செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் இந்த திரைப்படம், தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த ‘அத்திரிண்டிக்கி தாரிடி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் டைட்டில் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கவிருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிம்பு நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அவர் பேசிய ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற வசனம் ரசிகர்களிடம் செம அப்லாஸ் வாங்கிய நிலையில், சுந்தர்.சி இயக்கி வரும் சிம்புவின் படத்துக்கு இந்த பெயரையே வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.