சிம்புவுடன் இணையும் மஹத்: வெற்றி கூட்டணியாக அமையுமா?

 

சிம்புவுடன் இணையும் மஹத்: வெற்றி கூட்டணியாக அமையுமா?

 ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு மற்றும் மஹத் கூட்டணி இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளனர்.

சென்னை: ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு மற்றும் மஹத் கூட்டணி இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளனர்.

தெலுங்கில் கடந்த  2013-ல்  பவன் கல்யாண் – த்ரிவிக்ரம் நடிப்பில்  ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ என்ற திரைப்படம் வெளியானது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தின்  தமிழ் ரீமேக்கில் சிம்பு, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகின்றனர். இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில்  இப்படத்தில்  மஹத் இணைந்திருக்கிறார். சிம்புவின் நண்பரான மஹத், சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்குச் சென்று பிரபலமானார். தற்போது அவர் சிம்புவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில்  மஹத் இரண்டாவது ஹீரோ என்றும், மஹத்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏற்கெனவே மஹத் சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.