சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரமாண்ட கூட்டணி!

 

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரமாண்ட கூட்டணி!

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார். 

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார். 

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அரசியல் திரில்லரான இந்த படத்திற்காக சிம்பு லண்டனுக்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

str

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான அறிவிப்பு எதுவும் வெளிவராததால் படத்தின் அப்டேட் விடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது ரசிகர்களின் கோரிக்கை செவிசாய்த்து படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது 

ஆம்.. படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.