சின்மயி மீது வழக்கு… ராதா ரவி உறுதி!

 

சின்மயி மீது வழக்கு… ராதா ரவி உறுதி!

திரைப்பட டப்பிங் யூனியன் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது. தலைவர் பதவிக்கு ராதா ரவியும் பின்னணி பாடகி சின்மயியும் போட்டியிட்டனர். ஆனால், சின்மயியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராதா ரவி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

விளம்பரப் பிரியரான சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ராதா ரவி கூறியுள்ளார்.
திரைப்பட டப்பிங் யூனியன் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது. தலைவர் பதவிக்கு ராதா ரவியும் பின்னணி பாடகி சின்மயியும் போட்டியிட்டனர். ஆனால், சின்மயியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராதா ரவி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

radharavi.jpg1

இந்த நிலையில் ராதா ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“டப்பிங் யூனியன் தலைவராகப் போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். யூனியன் நலனுக்காக, பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். பாடகரும், டப்பிங் யூனியன் கலைஞருமான பாடகி சின்மயி, மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். எங்கள் மீது தவறான குற்றச்சாட்டைத் தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்.  சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால், தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார்” என்றார்.

chimayi

முன்னதாக வாக்களிக்க வந்த சின்மயிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் நிருபர்களை சந்தித்த சின்மயி, “எஸ்.வி.சேகர், ராதா ரவியை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எல்லாம் சங்கத்தை விட்டு நீக்குகிறார்கள். ராதா ரவி காலில் விழுந்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.