சின்மயி ஒரு ஐயங்கார் தே**** – பிராமணர் சங்க தலைவர் ஆபாச பேச்சு!

 

சின்மயி ஒரு ஐயங்கார் தே**** – பிராமணர் சங்க தலைவர் ஆபாச பேச்சு!

பாடகி சின்மயியை பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மிக கொச்சையாக விமர்சிப்பது போன்ற திடுக்கிடும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: பாடகி சின்மயியை பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மிக கொச்சையாக விமர்சிப்பது போன்ற திடுக்கிடும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு தனிமையில் நேரும் பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கூறிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ME TOO’ ஹேஸ்டேக் மூலம் சின்மயி வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கீழ் தரமான பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்ததாக பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த தகவலை வெளியிட்ட சின்மயி, பிராமணர் சங்க பிரதிநிதிகள் நாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

சமுதாயத்தில் தங்களை மிகவும் தூய்மைவாதிகளாக காட்டிக் கொள்ளும் பிராமணர்களின் சங்கத் தலைவராக இருப்பவர் மீதே இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது, பிராமணர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, நாராயணனை சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகக்கோரி பிராமணர் சங்க பிரதிநிதிகள் குரல் எழுப்பியுள்ளனர். அப்போது பிராமணர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஒருவருக்கும், நாராயணனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில், சின்மயியை ஐயங்கார் தே**** என்றும், அவர் கூறுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நாராயணன் மிக ஆபாசமாகப் பேசியுள்ளார். அந்த ஆடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.