சினிமா இயக்குநரிடம் செல்போன் வழிப்பறி ! சினிமா பாணியில் வழிப்பறி என இயக்குநர் புகார் !

 

சினிமா இயக்குநரிடம் செல்போன் வழிப்பறி ! சினிமா பாணியில் வழிப்பறி என இயக்குநர் புகார் !

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சினிமா இயக்குநரிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சினிமா இயக்குநரிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

Cellphone

சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது காமகோடி நகர். இந்த பகுதியில் உள்ள குகன் தெருவில், இயக்குனர் ஒருவர் செல்போன் பார்த்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் இயக்குரின் முதுகை தட்டி உள்ளனர். உடனே நம் முதுகை யார் தட்டுவது என பின்னால் திரும்பி பார்க்க, கண் இமைக்கும் நேரத்தில் இயக்குநர் கையில் இருந்த செல்போனை இளைஞர்கள் தட்டிப்பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டடனர்.

Walking by looking into the phone

இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸாரிடம் இயக்குநர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இயக்குநரிடம் செல்போன் பறித்த இளைஞர்கள் இருவரும் சிறுவர்கள் என தெரிந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுவர்கள் வடபழனி வசிப்பது தெரிய வந்ததை அடுத்த முருகன் கோயில் அருகே அவர்களை கைது செய்தது வளசரவாக்கம் போலீஸ்.

அவர்களிடம் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் இதுபோல் நிறைய குற்றங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இயக்குநர், நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் உதவி இயக்குநர் என்றும் அவர் கடவுச்சீட்டு என்ற ஒரு படத்தை இயக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.‌

Cell phone

சென்னை முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள் இனிமேலாவது திருந்தி வாழவேண்டும். இதுபோல் சிசிடிவியில் சிக்கி சின்னாபின்னம் ஆவதை விட ஓட்டலில் மேஜை துடைக்கும் வேலைக்கு சென்றாவது உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றலாம்.
அது சரி செல்போனை பறிகொடுத்த இயக்குநரின் பெயர் என்னவென்று சொல்லவில்லையே என்றுதானே கேட்கிறீர்கள். பெயரை அந்த இயக்குநரே சொல்ல விரும்பாதபோது நாங்கள் எப்படி உங்களுக்கு சொல்லமுடியும்?