சினிமாவுலகூட இந்த மாதிரி நடக்காது! இந்த ஆந்திராகாரங்களை புரிஞ்சிக்கவே முடியல!

 

சினிமாவுலகூட இந்த மாதிரி நடக்காது! இந்த ஆந்திராகாரங்களை புரிஞ்சிக்கவே முடியல!

அமாவாசையாக இருந்திருந்தால், சேரில் கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டு, விரலைச் சுண்டி பாஷாவை கூப்பிட்டு வணக்கம் வைக்கச் சொல்லியிருப்பான். ஆனால் மாதவ் அமாவாசை அல்லவே. முன்னாள் அதிகாரி வருவதைப் பார்த்ததும் ஓடோடிப்போய் அவருக்கு முன்பாக சல்யூட் அடிக்கிறார்.

ஒரு போலிஸ் அதிகாரி சககாவலர்களுடன் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்திற்கு பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட வருகிறார். அவரைப் பார்த்த ஓர் கட்சியின் வேட்பாளர் ஒருவர், ஓடிவந்து அவர் முன்பாக நின்று செம ராயலாக ஒரு சல்யூட் அடிக்கிறார். வேட்பாளரின் சல்யூட்டுக்கு காவல் அதிகாரியும் புன்முறுவலோடு பதில் வணக்கம் வைக்கிறார், இதனை மீடியாக்கள் வளைத்துவளைத்து படம் எடுக்கின்றன, அந்தப்படம் இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்ன சிறப்பு அந்தப்படத்தில்?

Madhav, MP

துணை கண்காணிப்பாளரான அந்த காவல் அதிகாரியின் பெயர் மெகபூப் பாஷா, அந்த வேட்பாளர் பெயர் கொரண்ட்லா மாதவ். இந்த மாதவ் வேறு யாருமல்ல, சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு துணை கண்காணிப்பாளர் பாஷாவின்கீழ் பணியாற்றிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆவார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பாக இந்த்பூர் தொகுதியில் வேட்பாளராக நிற்பதற்காக கடந்த டிசம்பர் மாதமே பணியில் இருந்து விலகிவிட்டார் மாதவ்.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கிறது, மாதவ் ஒரு நாற்காலியின் விளிம்பில் பயத்துடன் அமர்ந்திருக்கிறார். முதல் மூன்று நான்கு சுற்றுக்கள் முடிவில் மாதவ் சற்றே முன்னிலை  பெறுகிறார். நாற்காலியின் விளிம்பில் இருந்து சற்றே வசதியாக அமர்கிறார். பத்து சுற்றுக்கள் முடிவில் மாதவ் அசைக்க முடியாத முன்னிலை பெறும் தகவல் வரும்போதுதான், பாதுகாப்பு பணிகளை பார்வையிட பாஷா அங்கே வருகிறார்.

அமாவாசையாக இருந்திருந்தால், சேரில் கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டு, விரலைச் சுண்டி பாஷாவை கூப்பிட்டு வணக்கம் வைக்கச் சொல்லியிருப்பான். ஆனால் மாதவ் அமாவாசை அல்லவே. முன்னாள் அதிகாரி வருவதைப் பார்த்ததும் ஓடோடிப்போய் அவருக்கு முன்பாக சல்யூட் அடிக்கிறார். அதிகாரியும் தன் முன்னாள் ஊழியன் என்ற திமிரில் தோள்மேல் கைப்போட்டு பேசவில்லை. மாறாக, அவரும் பதில் சல்யூட் வைக்கிறார். என்ன அழகான காட்சி சார்! தெலுங்கு சினிமா மட்டும்தான் ரத்தம் தெறிக்கும் ஆனா ஆளுங்க பூரா பச்ச மண்ணுங்க சார்! பாசம் காட்டினா மட்டையா மடங்கிடுவாங்க! முக்கியமான விஷயம், அந்த தேர்தலில் மாதவ் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார்.