சினிமாவிற்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்: கடைசியில் நிஜமான பரிதாபம்!

 

சினிமாவிற்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்: கடைசியில் நிஜமான பரிதாபம்!

இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி : இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர்  ஆர்.எஸ். கோபால். இவர் வலியுடன் காதல்  என்ற படத்தில் நடித்துள்ளதுடன் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.தற்போது இவர் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் இறப்பது போன்ற காட்சிக்காகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும்,  சவபெட்டியில்  மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும்  வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். 

gopal

அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடை வைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாகக் கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர். அப்போது அது நான் நடிக்கும் புது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என்று விளக்கமளித்தார். 

இந்நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதுவும் படத்திற்காகத் தான் இருக்கும் என்று அவருக்கு தெரிந்தவர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால்  கோபால்  உடல்நிலை குறைவால் உயிரிழந்தது பிறகு தான் தெரிந்துள்ளது. 

gopal

ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

சினிமாவிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சில நாட்களிலேயே உண்மையாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.