சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி

 

சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி

பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

மக்களவை தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் அபார வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மீண்டும் பிரதமராக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். தனி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று அரியணையில் ஏறிய பிரதமருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதையடுத்து வாரணாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  “வாரணாசியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மக்கள் நம்பிக்கை வைத்த காரணத்தினால் தான் கேதார்நாத் சென்று நிம்மதியாக தியானம் மேற்கொண்டேன். பாஜாக தோல்வியை தழுவும் என அரசியல் நோக்கர்களின் கருத்துக்கணிப்பை இந்த தேர்தல் பொய் ஆக்கியுள்ளது. இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது. என்னை எதிர்த்து இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பாஜக, இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் ” என தெரிவித்தார்.