சிங்கிளா இருப்பதே சந்தோஷம்… கொரிய பெண்கள் எடுக்கும் பகீர் முடிவு

 

சிங்கிளா இருப்பதே சந்தோஷம்… கொரிய பெண்கள் எடுக்கும் பகீர் முடிவு

திருமணம், கணவன், குழந்தை என்று எதற்காக கஷ்டப்பட வேண்டும், சிங்கிளாகவே இருப்பது மகிழ்ச்சி என்று பல தென்கொரிய பெண்கள் கருதுகின்றனர். இதனால், திருமண பந்தத்துக்குள் வராமல் சிங்கிளாகவே பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால், கருத்தரித்தல் மற்றும் குழந்தை பிறப்பு விகிதம் தென் கொரியாவில் குறைந்துவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தென் கொரிய பெண்கள் சிங்கிளாக இருப்பதே சந்தோஷம் என்ற முடிவுக்கு வந்ததால் அங்கு பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துவிட்டது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

no-marriage-woman

திருமணம், கணவன், குழந்தை என்று எதற்காக கஷ்டப்பட வேண்டும், சிங்கிளாகவே இருப்பது மகிழ்ச்சி என்று பல தென்கொரிய பெண்கள் கருதுகின்றனர். இதனால், திருமண பந்தத்துக்குள் வராமல் சிங்கிளாகவே பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால், கருத்தரித்தல் மற்றும் குழந்தை பிறப்பு விகிதம் தென் கொரியாவில் குறைந்துவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நோ மேரேஜ் என்ற இயக்கத்தை இரண்டு பெண்கள் அறிமுகம் செய்தனர். இந்த இயக்கத்தில் தற்போது 37 ஆயிரம் பெண்கள் இணைந்துள்ளார்களாம். திருமணம், செக்ஸ், குழந்தை உள்ளிட்ட விஷயங்களை எதிர்ப்பதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இவர்களின் பிரசாரம் பல இளம் பெண்களை ஈர்த்து வருகிறது.
பெண்கள் திருமணத்துக்கு மறுப்பது, குழந்தைப் பேற்றை எதிர்ப்பது உள்ளிட்டவை அந்த நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. தென் கொரியா மேற்கொண்ட ஆய்வில் வெறும் 44 சதவிகித பெண்களுக்குத்தான் திருமணம் செய்து கணவனுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. பெண்களின் இந்த முடிவு காரணமாக பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைக்காமல் அல்லாடி வருவதும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.