சிங்கப்பூரில் வருங்கால மாமியாருடன் சுற்றிவரும் ஆல்யா மானஸா: வைரல் புகைப்படங்கள்!

 

சிங்கப்பூரில் வருங்கால மாமியாருடன் சுற்றிவரும் ஆல்யா மானஸா: வைரல் புகைப்படங்கள்!

‘ராஜா ராணி’ சீரியலுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள   சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூர் : ‘ராஜா ராணி’ சீரியலுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள   சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. வழக்கமாகக் கதைக்களமாக இருந்தாலும் இந்த ஜோடி பொதுமக்களால் இந்த ஜோடி கொண்டாடப்பட்டு வந்தது. சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக வலம்வந்த ஆல்யா – கார்த்திக் ஜோடி காதலிப்பதாக்கத் தகவல் வெளியானது. இதை இந்த ஜோடி உறுதி செய்தது.

alya

இதையடுத்து  சின்னதிரை நடிகர்களுக்கு  விஜய் டெலிவிஷன் விருதை விஜய் தொலைக்காட்சி வழங்கி கௌரவித்தது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஆல்யா மானஸா தட்டி சென்றார். அப்போது இந்த விழாவிலேயே ஆல்யா மானஸா  – சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  

alya

இந்நிலையில் ராஜா ராணி சீரியலுக்காக ஆல்யா மானஸா  – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி சிங்கப்பூர் பறந்துள்ளனர்.

alya

அங்கு இவர்கள் எடுத்து  கொண்ட புகைப்படங்களை சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

alya

அதில் இருவரும் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான சைனா டவுன் உணவு வீதிக்குச் சென்று அங்கு புகைப்படமெடுத்துள்ளனர். சைக்கில் ரெய்ட் சென்றுள்ளனர்.

alya

குறிப்பாக சஞ்சீவ் கார்த்திக்கின் அம்மாவுடன் ஆல்யா  மானஸா எடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.