சிக்கனமா ஃபாரின் டூர் போகனுமா… அதுக்கு இதுதான் சரியான நாடு!

 

சிக்கனமா ஃபாரின் டூர் போகனுமா… அதுக்கு இதுதான் சரியான நாடு!

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது ரொம்ப செலவு பிடிக்கற விவாகாரம்னு நினைகறவரா நீங்க,அப்போ கவலையை விடுங்க… கேரளாவுக்கோ,கோவாவுக்கோ போற செலவுல டூர் போக சிறந்த நாடு இந்தோனேசியாதான்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது ரொம்ப செலவு பிடிக்கற விவாகாரம்னு நினைகறவரா நீங்க,அப்போ கவலையை விடுங்க… கேரளாவுக்கோ,கோவாவுக்கோ போற செலவுல டூர் போக சிறந்த நாடு இந்தோனேசியாதான்.

jakarta

சாப்பாடு,தங்குமிடம்,போக்குவரத்து எல்லாமே நம்ம ஊரவிட ரொம்ப சீப்.வாங்க விரிவா பாப்போம். வெண்மணல் விரித்த அழகான கடற்கரைகள்,அழகான,ஆபத்தில்லாத காடுகள்,பச்சைப் பசேல் நெல்வயல்கள்,பன்பாட்டில் ஏகப்பட்ட இந்திய சாயல்கள் கொண்ட நாடு இந்தோனேசியா.

bandung

ஒரு அமெரிக்க டாலர் என்பது இங்கே 14500 ருப்பியா.அட நம்ம ஒரு ரூபாயே இங்க 200 ருப்பியா.நீச்சல் குளத்துடன் கூடிய வில்லாக்களே ஒரு நாளைக்கு 20 டாலர்தான்.நண்பர்களுடன் மொத்தமாகத் தங்கிக்கொள்ளலாம்.
அதெல்லாம் வேண்டாம், தனி அறை போதுமென்றால் 5 டாலருக்கே டபுள் பெட்டுடன் அறைகள் கிடைக்கின்றன.

surabaya

நல்ல தரமான கடல் உணவு,நம்ம ஊர் பாஷையில் சொல்வதானால் இங்கே  மீன் சாப்பாடு 3 டாலர்தான். போக்குவரத்து இன்னும் டெட் சீப், ஒரு மோட்டார் சைக்கிள் வாடகைக்கு எடுத்தால், ஒருநாளைக்கு 5 டாலர்தான்.சிங்கிளாக இருந்து ,மொப்பெட் போதுமென்றால் இரண்டு டாலர்தான் வாடகை.காருக்கு ஒருநாள் வாடகை 15 டாலர்தான்.பெட்ரோல் கிட்டத்தட்ட நம்ம ஊர் விலைதான்.

என்னவெல்லாம் பார்க்கலாம் தெரியுமா?

தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் ஓல்ட் ஜகார்த்தாவில் பழைமையான டட்ச் காலணியாட்சிக்கால கட்டிடங்கள்.இந்தோனேசியாவிலேயே அழகான நகரமான பண்டுங்,இங்கே ஒரு அழகான நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.

depok

அடுத்தது,இந்தோனேசியாவின் பழைமையான நகரமான சுராபயா,அழகான பழங்கால மசூதிகள்,பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு இடையே ஒடும் கால்வாய்கள் இதன் அழகு.

அடுத்து தவர விடவே கூடாத பாலி.உயர்ந்த மலைகள்,பசிய பள்ளத்தாக்குகள், உளுவாட்டு என்கிற மலைக்கோவில் என உங்கள் ஜென்ம சாபல்யம் தீர கண்டு ரசிக்க வேண்டிய நகரம்.

bali

டிபோக் என்கிற நகருக்குப் போனால் பழைமை மாறாத இந்தோனேசிய மக்களின் கிராமப்புற வாழ்க்கையை கண்டு வியக்கலாம்.நெல் சாகுபடி, மீன்பிடித்தல் சமையல் எல்லாவற்றிலும் நீங்களும் கலந்துகொண்டு அனுபவம் பெறலாம்.மனாடோ, இது ஒரு கடற்கரை நகரம்.இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மக்களின் பாரம்பரிய உணவுகள் கிடைக்கும். நிறைய ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் இருக்கின்றன. அவற்றை தவிர்த்து ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுங்கள்.

செமரங்.இது சரித்திர ஆர்வலர்களை கவரும் நகரம்.சரித்திரம் பேசும் கட்டிடங்கள்,அருங்காட்சியகங்கள்,1800 ஆண்டுகாலம் பழைமையான கோவில்கள் என்று தூரக்கிழக்கின் சரித்திரம் உறைந்திருக்கிறது இங்கே.

manado

லம்போக்.இந்தோனேசியா என்பது ஆயிரக்கணக்கான தீவுகளின் தொக்குப்புத்தான்.அவற்றில் மிக அழகான தீவுகளில் ஒன்று லம்போக். வானுயர்ந்த மரங்கள்,தண்ணீர் கொட்டும்  அருவிகள் என்று உங்களைக் கட்டிப்போட்டு விடும் இந்த லம்போக்.

lombok

இந்தோனேசியா போக விசா அவசியமில்லை. அங்கே போய் பெற்றுக்கொள்ளலாம். வேண்டுமானால் நீடித்துக்கொள்ளலாம்.இன்னும்  இரண்டு மாதம் வெய்யில் இப்படித்தான் இருக்கப்போகிறது.போய் லம்போக் தீவிலோ,பாலியிலோ இந்தக் கோடையை கழியுங்கள்.