‘ சிகரெட் பிடித்தபடி வெறித்தனம்’ விஜய் சேதுபதியின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்ஸ் … ரசிகர்கள் உற்சாகம்!

 

‘ சிகரெட் பிடித்தபடி வெறித்தனம்’ விஜய் சேதுபதியின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்ஸ் … ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதியின்  திரைப்பயணம் சற்று மிரட்டலாகவே உள்ளது. 

சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு வில்லனாக  மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதியின்  திரைப்பயணம் சற்று மிரட்டலாகவே உள்ளது. 

 

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில்  ‘உப்பெனா’ படத்தில் நடித்துள்ளார். இதற்காக போஸ்டர்கள் நேற்று வெளியாகின. அதில்  ஸ்டைலாக சிகரெட் மிரட்டலாக இருக்கிறார். அதேபோல் மற்றொரு போஸ்டரில் வெறுப்பான முகத்துடன் காரில் கை வைத்தவாறு நிற்கிறார்.

இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர்  புச்சிபாபு சனா இயக்கும் இந்த படத்தில், பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.